எவ்வாறாயினும், பல்வேறு பிராந்தியங்களுக்கான விநியோக தரவுகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லையென்றாலும், மூன்று மாத காலத்திற்கு பொருட்கள் சந்தையில் கிடைக்கும் எனவும் அவர் கூறினார்.
பல்வேறு காரணங்களால் ஒரு பிரதேசத்தில் உள்ள சில பொருட்கள் ஏனைய பிரதேசங்களில் இல்லாமல் போகலாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கையிருப்பு அல்லது வர்த்தக நிலைமைகள் போன்ற சில நிபந்தனைகளை வர்த்தகர்கள் பயன்படுத்திக் கொள்ள முயற்சித்தால், அனுப்பியவர் மீது வழக்குத் தொடரப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)