
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அமைச்சரவை அமைச்சர்கள் மாதம் ஒரு முறையாவது சைக்கிளில் பயணம் செய்வதை கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
பொதுமக்களின் சைக்கிள் பாவனையை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியே இந்த நடவடிக்கை என அமைச்சர் அமரவீர விளக்கமளித்துள்ளார்.
சைக்கிள் வண்டிகளை பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அமைச்சர்களை ஊக்குவிப்பதன் மூலம் அரசாங்கம் முன்மாதிரியாக இருக்க விரும்புகிறது என்று அவர் கூறினார்.
எவ்வாறாயினும், அமைச்சரவை அமைச்சர்கள் பொது இடங்களில் சைக்கிளில் பயணித்தால் பாதுகாப்பு உட்பட பல இன்னல்கள் ஏற்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த விடயம் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாகத் தெரிவித்த அவர், அது குறித்து பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)