ஆசிய சாதனை படைத்த ஒன்றரை வயது மகள் ஆயிஷா!
advertise here on top
advertise here on top

ஆசிய சாதனை படைத்த ஒன்றரை வயது மகள் ஆயிஷா!


ஆசிய சாதனை புத்தகத்தில் தன் பெயரையும் பதித்து "GRAND MASTER " எனும் மகுடத்தை சூடி ஊருக்கும் தாய் நாட்டிற்கும் பெருமை தேடி தந்திருக்கிராள் மகள் ஆயிஷா பரீதா.


52 Fruits, 37 Animals, & Shapes ஆகியவற்றின் பெயரில்லா Flash Cards களை பார்த்து அவைகளின் பெயர்களை ஆங்கிலத்தில் தெளிவாகவும், விரைவாகவும் சொல்லி இச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.


கடந்த 2020.06.29ஆம் திகதி அன்று பிறந்த ஆயிஷா தனது ஒன்றரை வயதில் இச் சாதனையை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது அத்துடன் இலங்கையின் அதிகுறைந்த வயதில் ஆசிய சாதனை புத்தகத்தில் முதலாவதாக  தனது பெயர் பதித்தவரும் இவரே.


வடமத்திய மாகணத்திற்கான ஆசிய சாதனை புத்தகத்தின் முதல் சாதனையாளரும் இவரே.


இவரின் சாதனையை உறுதிப்படுத்தி ASIA BOOK OF RECORD நிறுவனத்திலிருந்து சான்றிதழ், பதக்கம் மற்றும் ஏனைய நினைவுச் சின்னங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. 


ASIA BOOK OF RECORD நிறுவனத்திற்கு  எங்கள் நன்றியைத் தெரிவிப்பதோடு இச் சாதனையை நிகழ்த்த உறுதுணையாக இருந்த உறவுகளுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


ஆயிஷாவின் எதிர்காலம் சுபிட்சமிக்கதாக அமைய உங்கள் துஆக்களிலும் இணைத்துக்கொள்ளுங்கள்.


நன்றி


இப்படிக்கு,


தந்தை இப்றாஹிம் ரம்ஷான்

தாய் றிப்னா ஜுனைட்Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.