கொழும்பு, ஜம்பெட்டா தெருவில் உள்ள சேமிப்புக் கிடங்கு ஒன்றில் இன்று ஏற்பட்ட பாரிய தீயினால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
தீயை அணைக்க குறைந்தது 10 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.
சேமிப்புக் கிடங்கை ஒட்டியிருந்த சில கட்டிடங்களும் தீப்பிடித்து எரிந்தன.
தீயை அணைக்க இலங்கை விமானப்படையின் தீயணைப்பு பிரிவினர் கொழும்பு தீயணைப்பு பிரிவிற்கு உதவினர்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. (யாழ் நியூஸ்)