குறித்த பெண் இன்று (08) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 1.64 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பெண்ணிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் , போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பெண் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

