இலட்சக்கணக்கான பெறுமதியுடைய நகைகளை கொள்ளையிட்ட மூவர் கைது!
advertise here on top
advertise here on top

இலட்சக்கணக்கான பெறுமதியுடைய நகைகளை கொள்ளையிட்ட மூவர் கைது!


யாழ். பொலிஸ்பிரிவுக்குட்பட்ட வீடொன்றில் கடந்த மாதம் 31ஆம் திகதி 23 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய தங்கநகைகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை கொள்ளையிட்டமை தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


நகைகளை கொள்ளையிட்ட சந்தேகநபர் ஒருவரும் , அவற்றை அடகு வைத்த சந்தேகநபர்கள் இருவருமே இவ்வாறு கைது செய்துள்ளனர். அத்தோடு கொள்ளையிடப்பட்ட நகைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


இவ்வாறு கொள்ளையிடப்பட்ட நகைகளில் பொன்தாலிக்கொடியொன்றுடன்  4 தங்கசங்கிலிகள், 6 தங்கமோதிரங்கள், 5 தங்ககாதணிகள், 2 தங்க வளையல்கள், 2 தங்க நாணயங்கள், 2 தங்க பதக்கங்கள், 1 பஞ்சாயுதம் மற்றும் 2 தங்க முலாம் என்பவை அடங்குகிறது.


இவற்றை அடகு வைத்தமை தொடர்பில்  கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் 25, 27 வயதான வேலணை மற்றும் சுன்னாகம் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். 


பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.