எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுற்றாடல் விஞ்ஞான முதுகலைப் பட்டத்தின் இறுதிப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.
இது தொடர்பில் அவரது ட்விட்டர் கணக்கில் பதிவொன்றை இட்டு கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
"அரசியலுக்கு எந்த பாட நிபுணத்துவமும் தேவையில்லை, ஆனால் கற்றுக் கொள்வதை நிறுத்தினால், தீர்வுக்கு வெளியே சிந்திக்க முடியாது. சுற்றுச்சூழல் அறிவியலில் எனது முதுகலைக்கான 2 பாடங்களில் இறுதித் தேர்வினை முடித்தேன். ஒரு கடினமான பரீட்சை ஆனால் என்னால் முடியும் என்று நினைக்கிறேன். அடுத்து NFT மற்றும் பிளாக்செயினை போன்றவற்றில் கவனம் செலுத்துவேன்" என்று எதிர்க்கட்சித் தலைவர் ட்வீட் செய்துள்ளார். (யாழ் நியூஸ்)