நாட்டில் மேலும் அதிகரித்து வரும் வாகனங்களின் விலை விபரம்!
advertise here on top
advertise here on top

நாட்டில் மேலும் அதிகரித்து வரும் வாகனங்களின் விலை விபரம்!


இலங்கையில் வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது முதல் மீளவும் வாகன இறக்குமதி செய்யும் நாள் குறித்து மக்கள் மிகவும் ஆர்வம் காட்டிவருகின்றனர். பயன்படுத்திய வாகனங்களின் அதிக விலையே இதற்குக் காரணம்.


கோவிட் பரவல் தொடங்கியதில் இருந்து பல சந்தர்ப்பங்களில் வாகனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.


இதனால் இலங்கையில் பொதுமக்களுக்கு மிகவும் குறைந்த விலையில் கிடைத்த சுசுகி ஆல்டோ காரின் விலை தற்போது 4 மில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. மேலும், பயன்படுத்தப்பட்ட சுசுகி வேகன் ஆர் இன் விலை 6 மில்லியன் ரூபாவை தாண்டியுள்ளது.


இந்த பின்னணியில், மின்சார கார்களின் விலையும் குறைவாக இல்லை. இலங்கையில் அதிகம் பயன்படுத்தப்படும் நிசான் லீஃப் கார் 2.5 மில்லியன் ரூபா முதல் 3 மில்லியன் ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.


எவ்வாறாயினும், வாகனங்களை இறக்குமதி செய்யும் வரை நாட்டில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலைகள் தொடர்ந்தும் உயரும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


Suzuki Alto - 35 லட்சம் முதல் 40 லட்சம் ரூபா வரை

Suzuki Wagon R - 55 லட்சம் முதல் 60 லட்சம் ரூபா வரை

Toyota Vitz - 6 மில்லியன் முதல் 7 மில்லியன் ரூபா வரை

Toyota Premio - 1.5 கோடி முதல் 2 கோடி ரூபா வரை

Toyota Corolla - 50 லட்சம் முதல் 55 லட்சம் ரூபா வரை

Toyota Aqua - 6 மில்லியன் ரூபா முதல் 65 லட்சம் ரூபா வரை

Micro Panda - 2.5 மில்லியன் முதல் 3 மில்லியன் ரூபா வரை

Toyota Allianz - 75 லட்சம் முதல் 80 லட்சம் ரூபா வரை


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.