சில மாதங்களுக்கு முன்னர் இது தொடர்பில் தன்னால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அவ்வாறு கூறியதன் பின்னர் மக்களை தவறாக வழிநடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சில மாதங்களுக்கு முன்னர் கூறியது தற்போது நிஜமாகியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பெற்றோல் மற்றும் டீசலை நட்டத்தில் விற்பனை செய்வதாகவும், திறைசேரியிலிருந்து எவ்வித மானியமும் பெறுவதில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
விலையை அதிகரிக்காவிட்டால் எரிபொருளை கொள்வனவு செய்ய பணமில்லாமல் போகும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)