
இதேவேளை, ஊடகவியலாளர் சமுதித்தவின் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் இன்றும் சிசிரிவி காணொளி காட்சிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இதுவரையில் 86 சிசிரிவி காணொளி காட்சிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சரியான தகவல்களை வழங்குபவர்களுக்கு 5 இலட்சம் ரூபா வெகுமதியை ஹிரு ஊடக வலையமைப்பு தீர்மானித்துள்ளது.
தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களில் இருந்து, சில கைரேகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அந்தக் கைரேகைகள் தொடர்பான விசாரணை அறிக்கையை, குற்ற ஆவணக் காப்பகத்தில் இருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அதேநேரம், குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சி.சி.ரி.வி காணொளிக் கட்சிகள் உட்பட மேலும் சில விஞ்ஞான ரீதியான சாட்சிகள் தொடர்பில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.