காபட் வீதி தொடர்பில் மாத்தறை வெலிகம பொல்வத்த பிரதேசத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற செய்தியொன்று இதனை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
மாத்தறை வெலிகம பொல்வத்த பிரதேசத்தில் வீதியின் நடுவே மின்கம்பங்கள் காணப்படுகின்றன.
வெலிகம பிரதேச சபையின் அனுமதியுடன் காணி ஒன்றிற்கு செல்லும் பாதை தனியார் நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டு பின்னர் வீதியின் நடுவில் உள்ள மின்கம்பங்களை அகற்றுவதற்காக வெலிகம மின்சார சபைக்கு பணம் செலுத்தப்பட்டது.
மின்கம்பங்களை அகற்றுவதற்கு மின்சார சபை காலதாமதம் செய்ததாகவும், மின்கம்பங்கள் இருக்கும்போதே வீதிக்கு காபட் பாதை போடப்பட்டதாகவும் எமது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த தூண்களை அகற்றி அதனை முறையாக சரிசெய்ய சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக நாங்கள் மேற்பார்வையிட்டு சபையில் தெரிவித்துள்ளோம். மக்கள் வசதிக்காக நல்ல கார்பெட் வீதியாக மாற்ற நடவடிக்கை எடுப்பதில் நடைமுறை சிக்கல் இருந்தது.
ஏனென்றால் கார்பட் வீதி உயரமாக உள்ளது. விரைவில் இந்த மின்சார தூண்களை அகற்றி, மக்கள் வசதிக்காக நல்ல கார்பெட் வீதியாக மாற்றப்படும் என இது தொடர்பில் வெலிகம பிரதேச சபை உறுப்பினர் சமன் கமகே கருத்து தெரிவித்தார்.

