
க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெற்று வருகின்றது. இந்தத் தேர்வில் பங்குபெறும் அனைத்து மாணவர்களும் சிறந்த பெறுபேறுகளைப் பெற ACJU பிரார்த்தனை செய்கிறது.
இப் பரீட்சைகளில் ஈடுபடும் முஸ்லிம் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் ஜும்ஆ தொழுகைக்கு வருகை தர வேண்டியிருப்பதால், ஜும்ஆ மஸ்ஜித்களின் அனைத்து கதீப்கள் மற்றும் இமாம்கள் சொற்பொழிவைக் குறைத்து மதியம் 12.55 மணிக்குள் பரீட்சை முடியும் வரை ஜும்ஆவை முடிக்குமாறு ACJU அன்புடன் கேட்டுக்கொள்கிறது.
அஷ் ஷேக் எம். அர்கம் நூராமித் பொதுச் செயலாளர் – அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா