இவ்வாறு உயிரிழந்தவர் லிதுல லாமரியர் தோட்டத்தைச் சேர்ந்த 74 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான மருதைவீரன் பெருமாள் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் லிதுலையில் உள்ள உணவகம் ஒன்றில் சமையல்காரராக பணிபுரிந்து வந்த நிலையில், அதிகாலை வழமை போன்று உணவகத்திற்கு வந்த குறித்த நபர் சமைத்துக்கொண்டிருந்த போது அவரது சட்டையில் தீ பிடித்து உணவகத்தின் மேல்மாடியில் உள்ள சமையலறையில் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் லிதுலை பொலிஸார் தெரிவித்தனர்.
தீ பரவும் போது அங்கு எவரும் இருக்கவில்லை எனவும், தீயினால் இந்த சமையல்காரர் உயிரிழந்துள்ளதாக உணவகத்தின் உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)