ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியிலுள்ள புதிய சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானியர் உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன், ஆறுபேர் காயமடைந்துள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதலில் புதிதாக கட்டுமான பணி நடைபெற்று வரும் பகுதியிலுள்ள தளத்தில் மூன்று எரிபொருள் பவுஸர்கள் வெடித்து சிதறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தலைநகர் அபுதாபியில் ட்ரோன்களால் ஏற்பட்ட இரண்டு தீ விபத்துகளை அதிகாரிகள் அறிவித்ததை அடுத்து, எமனின் ஈரானுடன் இணைந்த ஹவுதி இயக்கம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது தாக்குதல் நடத்தியதாக உரிமை கோரியுள்ளது.
புதிய அபுதாபி விமான நிலையத்தில் எரிபொருள் ஏற்றிச் சென்ற மூன்று பவுஸர்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மூன்று எரிபொருள் பவுஸர்களில் தீ மற்றும் வெடிப்பு ஏற்பட்டதாகவும், அதனையடுத்து புதிய விமான நிலையத்தின் கட்டுமான தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் அபுதாபி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.