கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக வயதான நபர் உயிரிழப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக வயதான நபர் உயிரிழப்பு!


உலகிலேயே அதிக வயதுடைய மனிதராக அறியப்பட்டவர் தனது 112 வயதில் காலமானார்.


உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சாடர்னினோ டிலா ப்யூன்டே கடந்த 19ஆம் திகதி தனது 112 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.


ஸ்பெயின் நாட்டின் வடமேற்கில் உள்ள லியோன் நகரைச் சேர்ந்தவர் சாடர்னினோ டிலா ப்யூன்டே இவரை உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் சாதனைப் புத்தகம் கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தது.


பெப்ரவரி 11, 1909 இல் லியோனின் புவென்டே காஸ்ட்ரோவின் சுற்றுப்புறத்தில் பிறந்த சடர்னினோ – ‘எல் பெபினோ’ என்றும் அழைக்கப்படுகின்றார். இவர் 1933 இல் அன்டோனினா பேரியோ குட்டிரெஸை மணந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.