நாடாளுமன்ற உறுப்பினருக்கு கடந்த 10 ஆம் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவருக்கு விஷேட சுகயீனம் இருப்பதாக தெரியவரவில்லை எனவும் கொழும்பு பிரதான நீதித்துறை வைத்திய அதிகாரி இன்று நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
இராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு தொடர்பிலேயே நீதிமன்ற மருத்துவ அதிகாரியினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு அடுத்த மாதம் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.