டீசலில் இயங்குவதும் குளிரூட்டல் வசதிகொண்டதுமான பல்வகை ரயில் தொகுதி இந்திய கடனுதவியின்கீழ் ரைட்ஸ் (RITES) நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்டநிலையில் அதன் சேவையை கௌரவ அமைச்சர் பவித்ராதேவி வன்னிஆராச்சி அவர்கள் அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.
கல்கிசை முதல் காங்கேசன்துறை வரையிலான ரயில் சேவையினையும் ஆரம்பித்துவைத்த கௌரவ அமைச்சர் பவித்ராதேவி வன்னிஆராச்சி அவர்கள் இந்த ஆரம்ப ரயில் சேவையில் பயணித்த நிலையில் அமைச்சர் அவர்களை பிரதி உயர் ஸ்தானிகர் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் வரவேற்றார்.