சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இலங்கை வந்தடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்து 65 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்.
தூதுக்குழுவினருடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் சீன வெளிவிவகார அமைச்சர், பல்வேறு முக்கிய சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.