பம்பலப்பிட்டியில் உள்ள ஏழு மாடி கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்ததில் 15 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரஸ்டர் பகுதியில் உள்ள 7 மாடி கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து சிறுவனொன்று 28.01.2022 அன்று மாலை விழுந்துள்ளதாக கிடைத்த தகவலையடுத்து பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
காயமடைந்த சிறுவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த சிறுவன் கொழும்பு 04, கிரஸ்டர் பகுதியில் வசிக்கும் 15 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊடகப் பேச்சாளர் அலுவலகம்,
பொலிஸ் ஊடகப் பிரிவு