இன்று நாட்டில் சீமெந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அதிக விலை கொடுத்து சீமெந்துகளை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
50 கிலோ கிராம் சீமெந்து மூட்டை ரூ. 1375 இற்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது ஒரு மூட்டை சீமெந்து ரூ. 1700 ரூபா தொடக்கம் 2000 வரை விற்பனை செய்யப்படுவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
சீமெந்து தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக பல கட்டுமானங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
சீமெந்து இறக்குமதிக்கு டொலர்கள் கிடைக்காததும், வங்கிகளில் இருந்து கடன் கடிதங்களை திறக்க முடியாததும் தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் என சீமெந்து நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
நாட்டின் தேவையில் 60% உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது, மீதமுள்ள 40% இறக்குமதி செய்யப்படுகிறது. (யாழ் நியூஸ்)