புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்ட போது ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக நால்வர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதாவது புத்தாண்டை வரவேற்பதற்காக பட்டாசு வெடிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது நால்வர் காயமடைந்துள்ளனர்.
இதற்கமைய,நேற்றிரவு மாத்திரம் 188 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில் 82 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் விபத்து சம்பவங்கள் அதிகளவு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.