இலங்கையிலுள்ள அனைத்து கத்தோலிக்க ஆயர்களும், குருமார்களும், பொது மக்களும் ஜனவரி 14ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 1000வது நாளைக் குறிக்கும் பிரார்த்தனையில் ஒன்று கூடுங்கள் என்று கொழும்பு பேராயர் தனது முகநூல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி அன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் கடவுளுக்கு முன்பாக அனைத்து கத்தோலிக்க ஆயர்களும், குருமார்களும், அருட்சகோதரிகளும் மற்றும் பாமர மக்களும் தெவத்தே பேராலயத்தில் பிரார்த்தனை ஆராதனைக்காக ஒன்று நாங்கள் ஒன்று கூடுவோம் என்று பேராயர் விக்கிரமசிங்க கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்படைத்தன்மையையும் நீதியையும் எதிர்பார்க்கின்றார்கள் என்று அவர் மேலும் கூறினார்.
இலங்கையில் உள்ள கத்தோலிக்க திருச்சபை தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும், அத்துடன் இத் தாக்குதல்களுக்கு அரசியல் அனுசரணை உள்ளதா என்பதை கண்டறிய மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.