பிலியந்தலை, ஹொரணை - கொழும்பு வீதியில் பொகுந்தர சந்திக்கு அருகில் இன்று (29) காலை சொகுசு ஜீப் வண்டியில் மோதியதில் 52 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஜீப் வண்டியை ஓட்டிச் சென்ற பெண் தனது குடும்ப உறுப்பினர்களுடன் பிலியந்தலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த போது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாகனம் வீதியை விட்டு விலகி தொலைபேசிக் கம்பம் மற்றும் சுவர் மீது மோதியதாகவும், அதன் போது அதன் பாதையில் சென்ற பாதசாரிகள் மீது மோதியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவர் பொரலஸ்கமுவ, வெரஹெர பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
பெண் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)