கவிஞர் அஹ்னாப் ஜஸீம் பிணையில் விடுதலை!

கவிஞர் அஹ்னாப் ஜஸீம் பிணையில் விடுதலை!


கவிஞர் அஹ்னாப் ஜஸீமுக்கு இன்று (15) புத்தளம் மேல் நீதிமன்றம் பிணை வழங்கியது.


கடந்த மே 16, 2020 அன்று கொடூரமான பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது அஹ்னாப் ஜஸீம் கைது செய்யப்பட்டார்.


“அவர் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்படாவிட்டால், அவர் சர்வதேச தரத்திற்கு ஏற்ப நியாயமான விசாரணையை வழங்க வேண்டும். அரசாங்கம் தாமதமின்றி பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று சர்வதேச மன்னிப்புச் சபை கூறியது.


26 வயதான இலங்கைக் கவிஞரும் ஆசிரியருமான ஜஸீம், 2020 மே 16 ஆம் திகதி முதல் இலங்கை அதிகாரிகளால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றில் முன்வைக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.


அஹ்னாப் ஜஸீம் மோசமான சூழ்நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணையின் போது தவறான வாக்குமூலங்களை வழங்க அதிகாரிகள் அவரை வற்புறுத்த முயற்சித்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன என்று அம்னஸ்டி இன்டர்நேஷனல் கூறியிருந்தது. (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.