மூன்று பொலிஸ் அதிகாரிகளை சுட்டுக்கொண்ட பொலிஸ் சார்ஜன்ட்! திருக்கோவிலில் சம்பவம்!

மூன்று பொலிஸ் அதிகாரிகளை சுட்டுக்கொண்ட பொலிஸ் சார்ஜன்ட்! திருக்கோவிலில் சம்பவம்!


அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் நேற்றிரவு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேலும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்ததாவது,

"நேற்று (24) இரவு திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் அதே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். 

இந்த சம்பவத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் மூன்று பொலிஸார் சுடப்பட்டு, திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சம்பவ இடத்தில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் இரண்டு T-56 துப்பாக்கிகள் மற்றும் 19 தோட்டாக்களுடன் அத்திமலை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று சரணடைந்துள்ளனர்." 

மேலும் இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.