நாட்டில் தற்பொழுது கையிருப்பில் இருக்கும் டொலர்களின் பெறுமதி தொடர்பில் வெளிவந்த தகவல்!

நாட்டில் தற்பொழுது கையிருப்பில் இருக்கும் டொலர்களின் பெறுமதி தொடர்பில் வெளிவந்த தகவல்!

நாட்டில் தற்பொழுது கையிருப்பில் இருக்கும் டொலர்களின் பெறுமதி 1.6 பில்லியன் டொலர்கள் மட்டுமே என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

தங்களினால் செய்யப்படும் மோசடிகளைப் போன்றே பிட்ச் ரேடிங் தரப்படுத்தல் நிறுவனமும் மேற்கொள்ளும் என அரசாங்கம் கருதுகின்றது.

பிட்ச் ரேடிங் நிறுவனம் உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரப்படுத்தல் நிறுவனமாகும்.

இந்த தரப்படுத்தல் நடவடிக்கைகள் விஞ்ஞானபூர்வ நடைமுறைகளுக்கு அமைய உண்மையான தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவது. இதனை பொய் என யாராலும் கூற முடியாது.

நாட்டில் தற்பொழுது கையிருப்பில் இருக்கும் டொலர்களின் பெறுமதி 1.6 பில்லியன் டொலர்கள் மட்டுமே.

இதேவேளை, பிட்ச் ரேடிங் நிறுவனத்தின் கடன் தரப்படுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாது என மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் கூறுவது நகைப்பிற்குரிய விடயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.