வடமேல் மாகாண ஆளுநராக வசந்த கரன்னாகொட நியமனம்!

வடமேல் மாகாண ஆளுநராக வசந்த கரன்னாகொட நியமனம்!


வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக கடற்படை முன்னாள் தளபதி, அட்மிரல் ஒஃப் த ஃப்ளீட் வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (09) புதிய ஆளுநர் தமது நியமன கடிதத்தை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக்கொண்டதாக மேலும் தெரிக்கப்பட்டுள்ளது.

வட மேல் மாகாண ஆளுநராக பதவி வகித்துவந்த ராஜா கொல்லுரே கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.

இதனையடுத்து, ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்காக ஓய்வுபெற்ற கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.