பெண்ணொருவரை ஏமாற்றி பண மோசடி! பெண்ணொருவர் கைது!

பெண்ணொருவரை ஏமாற்றி பண மோசடி! பெண்ணொருவர் கைது!


கிளிநொச்சி - திருமுறிகண்டி பகுதியில் பெண் ஒருவரை ஏமாற்றி பணத்தை மோசடி செய்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் மற்றுமொரு பெண்ணொருவரிடம் அவரது வெளிநாட்டிலுள்ள உறவினர்கள் பெறுமதியான பொருட்களை அனுப்பியுள்ளதாக தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு குறித்த பணத்தொகையினை வங்கியில் வைப்பிலிடுமாறு தெரிவித்துள்ளார்.


அதனை அடுத்து 10 லட்சத்து 85 ஆயிரம் ரூபா பணத்தினை மேற்படி சந்தேகநபரின் பெயரில் வங்கியில் வைப்பிலிட்டதாக தெரிவித்துக் கடந்த செப்டம்பர் மாதம் இது தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது.


அதன்பின் பொலிஸாரின் விசேட நடவடிக்கை மூலம் கொழும்பு தெமட்டகொடை பகுதியில் வைத்து இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.


இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.