பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்டின் விவாத அழைப்பு! பேச்சு மூச்சு இன்றி இருக்கிறார் சாணக்கியன் எம்.பி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்டின் விவாத அழைப்பு! பேச்சு மூச்சு இன்றி இருக்கிறார் சாணக்கியன் எம்.பி!


வரலாறு தெரியாமல் பேசும் சாணக்கியன் என்னுடன் பொதுவெளியில் நேரடி விவாதத்திற்கு வருவாரா..? என்று முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹாபீஸ் நஸீர் அஹமட் கடிதமொன்றினூடாக அழைப்பு விடுத்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு இது தொடர்பில் ஹாபிஸ் நசீர் எம்பி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:


கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற வரவுசெலவுத் திட்ட விவாதத்தின் போது "ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களுக்கும் காணிப்பிரச்சினை இல்லை. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள்  பிள்ளையானுடன் சேர்ந்து காணிப்பிரச்சினை தொடர்பில் நாடகம் ஆடுகிறார்கள்" என்று தாங்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பிலேயே உங்களுடன் பகிரங்க விவாதத்தை நடாத்த நான் தயாராக இருக்கின்றேன்.


மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிகளுக்கு நடைபெற்ற, நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற  அநீதிகள் குறித்தும் சட்டத்திற்கு முரணாக முஸ்லிம் பிரதேச செயலகங்களின் காணி எல்லைகள் கபளீகரமாக பறிக்கப்பட்டது தொடர்பிலும்,  அரச அதிகாரிகள் சிலர் முஸ்லிம் பிரதேசங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பில் மேற்கொண்ட ஓரவஞ்சனையான  செயற்பாடுகள், முஸ்லிம்கள் இழந்த காணிகள், இழந்த கிராமங்கள் மற்றும் முஸ்லிம் பிரதேச காணிகள் கபளீகரம் செய்யப்பட்டமை தொடர்பிலுமே உங்களுடன் பகிரங்க விவாதம் ஒன்றை நடாத்த இந்த அழைப்பு விடுக்கின்றேன்.


மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மாவட்ட முஸ்லிம்களுக்கு காணி தொடர்பில் இழைக்கப்பட்ட அநீதிகளை  இந்நாட்டு மக்களுக்கு வெளிக்கொணர வேண்டிய தேவை மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனக்கு ஏற்பட்டுள்ளது. இவ்விடயங்கள் குறித்து உங்களுடைய அறியாமையை உங்களுக்கு தெளிவுபடுத்துவதற்கும் இது தொடர்பாக திறந்தவெளியில் உங்களுடன் விவாதிக்கும் வகையில்   உங்களது சம்மதத்தை நான் எதிர்பார்ப்பதுடன் அதற்குரிய இடம்,  பொருத்தமான நேரம் தொடர்பில் இருவரும்  கலந்தாலோசித்து இந்த பகிரங்க விவாதத்தை நடத்த வேண்டும் என வேண்டுகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


மாளிகைக்காடு நிருபர்


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.