நன்கொடையாக பெறப்பட்ட 10 லட்சம் கோவிட் தடுப்பூசிகளை மண்ணில் புதைத்த நாடு!

நன்கொடையாக பெறப்பட்ட 10 லட்சம் கோவிட் தடுப்பூசிகளை மண்ணில் புதைத்த நாடு!


நைஜீரியாவில் 10 லட்சம் கோவிட் தடுப்பூசிகள் மண்ணில் புதைத்து அழிக்கப்பட்டுள்ளது.


ஆப்பிரிக்க நாடுகளுக்கு கோவிட் தடுப்பூசிகளை உலக சுகாதார அமைப்பு ஐரோப்பியா, இந்தியா, ரஷியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் நன்கொடையாக வழங்கி வருகின்றன.


இந்நிலையில், தடுப்பூசிகள் வழங்கப்பட்டும் போதிய மருத்துவ கட்டமைப்பு இல்லாததால் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தாமதம் ஏற்பட்டு வருகின்றது.


இந்நிலையில், நன்கொடையாக பெறப்பட்ட 10 லட்சம் அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் கோவிட் தடுப்பூசிகளை நைஜீரிய அரசு அழித்துள்ளது. 


அதற்கமைய, காலாவதியானதால் 10 லட்சத்து 66 ஆயிரத்து 214 கோவிட்  தடுப்பூசி டோஸ்களை மண்ணில் புதைத்து அழித்துள்ளதாக நைஜீரிய அரசு தெரிவித்துள்ளது.


நைஜீரியாவில் போதிய மருத்துவ கட்டமைப்பு வசதி இல்லாததாலும், தடுப்பூசி தொடர்பாக எதிர்மறை தகவல்கள் பரவியதால் தடுப்பூசி மீது மக்கள் தயக்கம் காட்டி வருகின்றமையினால் இவ்வாறு காலாவதியான தடுப்பூசிகளை நைஜீரிய அரசு அழித்துள்ளது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.