கொழும்பு - கண்டி வீதியில் பஹல கடுகண்ணாவ பகுதியை திறப்பதில் சிக்கல்!

கொழும்பு - கண்டி வீதியில் பஹல கடுகண்ணாவ பகுதியை திறப்பதில் சிக்கல்!

கொழும்பு - கண்டி வீதியில் 98 வது கிலோ மீற்றர் கீழ் கடுகன்னாவ வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமும் வீதி அபிவிருத்தி அதிகார சபையும் களப்பரிசோதனை செய்து வீதி பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சீரற்ற வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு - கண்டி வீதியின் 98 வது கிலோமீற்றர் மைல்கட்டை பகுதியில் கீழ் கடுகன்னாவ பகுதி தொடர்ந்தும் மீள அறிவிக்கும் வரையில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, போக்குரவரத்து தடையை தடுப்பதற்கு பின்வரும் மாற்று வழிகளைப் பயன்படுத்த முடியும். அதற்குத் தேவையான வழிகாட்டல்களை இலங்கை பொலிஸாரும் வீதி அபிவிருத்தி அதிகார சபையும் வழங்கி வருகிறது.
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.