இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நியுசிலாந்து அணி தெரிவானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நியுசிலாந்து அணி தெரிவானது!


நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கட்டுக்களினால் வெற்றிப்பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியுசிலாந்து அணி முதலில் இங்கிலாந்து அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 166 ஓட்டங்களை பெற்றது. இங்கிலாந்து அணி சார்பாக மொயீன் அலி 51 ஓட்டங்களையும் டேவிட் மலான் 41 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி 19 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 167 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. அபாரமாக துடுப்பெடுத்தாடிய டார்ல் மிச்சல் ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்களை பெற்றார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆடவுள்ளன. (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.