எவ்வாறாயினும், இந்த திட்டம் 2012 ஆம் ஆண்டு வீதித் திட்டத்திற்கு அமைவாக இருந்த போதிலும், 2014 ஆம் ஆண்டு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டு 2016 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும்.
ஆனால், பல்வேறு இடையூறுகளால் திறக்க முடியவில்லை என்றார்.
திறப்பு விழா குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகவும் ஆனால் தற்போதைய அரசாங்கம் அதன் பிரத்தியேக உரிமைகளை பறிப்பதாக வருத்தம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நல்லாட்சி ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களையே தற்போதைய அரசாங்கம் திறந்து வைப்பதாகவும், இந்த அரசாங்கம் எந்தப் பணிகளையும் செய்யவில்லை எனவும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)