எரிவாயு வெடிப்பு சம்பவம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் தெரிவித்த அறிவிப்பு!
advertise here on top
advertise here on top
happy kids fun world

எரிவாயு வெடிப்பு சம்பவம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் தெரிவித்த அறிவிப்பு!

பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அண்மையில் தயாரிக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்களின் தரத்தில் பிரச்சினை இல்லை என லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அண்மையில் பல எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான செய்திகளை அடுத்து, எரிவாயு சிலிண்டர்களின் கலவை மாற்றப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன கேள்வி எழுப்பியிருந்தார்.

லிட்ரோ கேஸ் மற்றும் லாஃப்ஸ் கேஸ் ஆகியவற்றுக்கு இடையே இலாபம் மற்றும் கூட்டுறவை அதிகரிக்க அதன் பியூட்டேன்-புரோபேன் கலவையில் ஏற்பட்ட அபாயகரமான மாற்றத்தைத் தொடர்ந்து கசிவு வாயு வால்வுகள் குறித்து குணவர்தன எச்சரித்தார்.

எவ்வாறாயினும், லிட்ரோ கேஸ் லங்காவின் வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஜனக பத்திரத்ன, அத்தகைய கூற்றுக்களை மறுத்துள்ளார், எரிவாயுவின் தரத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கூறினார்.

இது தொடர்பாக தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு செய்திகள் மற்றும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், அவை பொதுமக்களை பயமுறுத்தும் வகையிலும், நிறுவனத்திற்கும், அரசுக்கும் இடையூறு விளைவிக்கும் வகையிலும் செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.

சுமார் 6 மில்லியன் வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் பொதுமக்கள் வசம் இருப்பதாகத் தெரிவித்த ஜனக பத்திரத்ன, அனைத்து எரிவாயு சிலிண்டர்களும் தேசிய தர நியமங்களுக்கு அமைவாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.