சிரேஷ்ட அமைச்சர் இராஜினாமா - ஜனாதிபதியின் வருகைக்கு காத்திருப்பதாக தெரிவிப்பு!

சிரேஷ்ட அமைச்சர் இராஜினாமா - ஜனாதிபதியின் வருகைக்கு காத்திருப்பதாக தெரிவிப்பு!

தனது அமைச்சின் செயலாளருடன் இணைந்து செயற்பட முடியாது என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்களில் ஒருவர் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் அமைச்சர் பல தடவைகள் அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவித்தும் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்காத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் அவர் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வது குறித்தும் ஆலோசித்து வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சின் செயலாளரை நீக்குவதாக இருந்தால் அவருக்கு பதிலாக பொருத்தமான நபரை நியமிக்குமாறு இந்த அமைச்சர் ஏற்கனவே முன்மொழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியதும் சம்பந்தப்பட்ட அமைச்சர் இது தொடர்பில் தீர்மானம் எடுப்பார் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.