இரு பிரமுகர்களும் சந்தித்து, தகவல் தொழில்நுட்பம், தொலைதூரக் கல்வி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடல்களை நடத்தினர்.
அரச தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்க ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்படவுள்ள விவசாய விஞ்ஞான பல்கலைக்கழகத்தை நிர்மாணித்தமைக்காக கல்வி அமைச்சர் தூதுவருக்கு நன்றி தெரிவித்தார்.