உலகின் முன்னணி தகவல் தொழிநுட்ப நிறுவனம் இலங்கையில்!

உலகின் முன்னணி தகவல் தொழிநுட்ப நிறுவனம் இலங்கையில்!


உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


இலங்கையின் முதலாவது மருத்துவ சாதன உற்பத்தி ஆலையை இன்று (17) திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


தகவல் தொழிநுட்ப துறையில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று இந்த மாதம் 25 ஆம் திகதி இந்நாட்டில் தமது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளது. இதன் மூலம் 2,000 இலங்கையர்களுக்கு உடனடி வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றார்.


மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்யும் இலங்கையின் முதலாவது தொழிற்சாலையான Flexicare Lanka நிறுவனம் ரைகம பண்டாரகம பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.


முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சுகாதார அமைச்சராக இருந்த போது இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியதுடன் திறப்பு விழாவிற்கு அவரும் அழைக்கப்பட்டிருந்தார்.


Flexicare Lanka என்பது ஐக்கிய இராச்சியத்தில் உள்ள Flexicare குழுமத்தின் துணை நிறுவனமாகும்.


இந்த தொழிற்சாலையை உருவாக்க 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவானது.


இங்கு தயாரிக்கப்படும் அறுவை சிகிச்சை கருவிகள், சுவாசக் கருவிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களில் 90% ஏற்றுமதி செய்யப்படும்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.