நாளை நாட்டில் மின்சாரம் தடைபடாது!

நாளை நாட்டில் மின்சாரம் தடைபடாது!


இலங்கை மின்சார சபையின் ஒன்றினைந்த தொழிசங்கங்களின் கூட்டமைப்பு கொழும்பில் நாளை (03) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று மட்டுமே முன்னெடுக்கவிருக்கின்றமையால் நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்படாது என மின்சார பொறியிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.


மின் நிலையங்களில் கடமையாற்றும் அத்தியாவசியப் பணியாளர்கள் மற்றும் அவசர பராமரிப்புப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களை தமது தொழிற்சங்கம் அழைக்காது என அதன் அழைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் மேலும் தெரிவித்தார்.


தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முன்னர் ஆயிரம் முறைக்கு மேல் யோசித்து வருகிறோம். ஆனால் நாளைய தினத்திற்கு பின்னர் ஒரு நாள் நிர்ணயம் செய்யப்படும். மின்வெட்டுக்கு பின்னர் நாங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடமாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.


மின் நிலையங்களில் தாங்கள் இல்லாமல், நிலையான மின்சாரம் வழங்க வழி இல்லை என்பதை நாங்கள் அறிவோம் என்றும் அவர் தெரிவித்தார்.


யுகதனவி எல்என்ஜி மின் உற்பத்தி நிலையம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட ஒப்பந்தத்திற்கு எதிராக நாளை தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.