செல்ஃபி எடுக்கப்போய் ரயில் மோதி இளைஞன் பலி!

செல்ஃபி எடுக்கப்போய் ரயில் மோதி இளைஞன் பலி!

வவுனியா, செட்டிக்குளம் கல்லாறு பாலத்தில் செல்ஃபி எடுக்கச் சென்ற இளைஞர் ஒருவர் மீது இன்று (05) காலை ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலைமன்னாரிலிருந்து மதவாச்சி நோக்கி புகையிரதம் பயணித்த போது இரண்டு இளைஞர்கள் பாலத்தில் இருந்து செல்ஃபி எடுக்கச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரயில் வருவதைக் கண்ட மற்றைய இளைஞர் பாலத்தில் இருந்து குதித்து உயிர் பிழைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னார் முருங்கன் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் கண்ணா என்ற 19 வயதுடைய இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் சடலம் செட்டிகுளம் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பாலத்தில் இருந்து குதித்து காயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செட்டிகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.