முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் கணவரின் பெயரில் புதிய அரசியல் கட்சி!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் கணவரின் பெயரில் புதிய அரசியல் கட்சி!


பிரபல சிங்கள திரைப்பட நடிகரும் இலங்கை மக்கள் கட்சியின் முன்னாள் தலைவருமான விஜய குமாரதுங்கவின் கொள்கைகளை அடிப்படையாக கொண்டு புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


விஜயயிச மக்கள் விடுதலை முன்னணி என்று இந்த கட்சிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளர் கமல் ரோஹன ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டது.


விஜய குமாரதுங்கவின் சகோதரியான ரூபா குமாரதுங்க உட்பட விஜய குமாரதுங்கவின் உறவினர்கள் சிலர் இணைந்து இந்த கட்சிய ஆரம்பித்துள்ளனர். எதிர்காலத்தில் நடைபெறும் அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் தமது கட்சி போட்டியிடும் என கமல் ரோஹன ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.


விஜய குமாரதுங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கணவர் என்பதுடன் இவர்களுக்கு விமுக்தி குமாரதுங்க என்ற புதல்வரும் யசோதர குமாரதுங்க என்ற புதல்வியும் உள்ளனர்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.