கத்தார் நாட்டுக்கு விசிட் விசா மூலம் உறவுகளை அழைத்துவரும் முறையில் திருத்தம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கத்தார் நாட்டுக்கு விசிட் விசா மூலம் உறவுகளை அழைத்துவரும் முறையில் திருத்தம்!


கத்தார் நாட்டுக்கு விசிட் வீசா மூலம் உறவுகளை அழைத்து வர இருப்போருக்கான தெளிவுப்படுத்தல் ஒன்று கத்தார் உள்துறை அமைச்சின் பொதுமக்கள் தொடர்புத்துறைப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது.


கத்தார் உள்துறை அமைச்சின் பொதுமக்கள் தொடர்ப்புத் துறைப் பொறுப்பாளர் Lt Col Dr Saad Uwaidha Al Ahbabi அவர்கள் கத்தாரில் பணிபுரியும் ஒருவர் தங்களது குடும்பத்தினர்கள், மற்றும் உறவினர்களை கத்தாருக்கு அழைத்து வருவதற்கான தேவைப்பாடுகள் பின்வருமாறு அமைய வேண்டும் என்பதாக தெரிவித்தார்.


மேலும் மனைவி குழந்தைகளுக்கான தனிப்பட்ட விசிட் வீசாவை மெட்ராஷ் (Metrash2) செயலி மூலம் விண்ணப்பிக்க முடியும். 


தேவையான ஆவணங்கள்:


1. வீசாவுக்கான விண்ணப்ப படிவம்

2. தொழில்வழங்குநரின் NOC கடிதம்

3. நிறுவனத்தின் கணினி அட்டைப்பிரதி (Computer Card)

4. கத்தாருக்கு பயணிக்க இருப்பவரின் கடவுச்சீட்டுப் பிரதி

5. விண்ணப்பங்களை சமர்ப்பிப்பவரின் QID பிரதி

6. மருத்துவ காப்பீடு

7. இருவழி விமான டிக்கட்

8. உறவு முறையை உறுதிப்படுத்தும் ஆவணங்கள்

9. குறைந்தபட்ச சம்பளம் 5,000 ரியால் காணப்பட வேண்டும்.


ஏனைய உறவினர்களுக்கான தனிப்பட்ட வருகை (சகோதரன், சகோதரி, தாய், தந்தை, மனைவியின் உறவினர்கள்) மெட்ராஷ் செயலி மூலம் விண்ணப்பிக்க முடியும். 


தேவையான ஆவணங்கள்:


1. வீசாவுக்கான விண்ணப்ப படிவம்

2. தொழில்வழங்குநரின் NOC கடிதம்

3. நிறுவனத்தின் கணினி அட்டைப் பிரதி (Computer Card)

4. கத்தாருக்கு பயணிக்க இருப்பவரின் கடவுச்சீட்டுப் பிரதி

5. விண்ணப்பங்களை சமர்ப்பிப்பவரின் QID பிரதி

6. மனைவி கத்தாரில் வசித்தால் அவரின் QID பிரதி

7. உறவு முறையை உறுதிப்படுத்தும் ஆவணங்கள்

8. குறைந்தபட்ச சம்பளம் 10,000 ரியால் காணப்பட வேண்டும்


மேலதிக தகவல்: https://www.dohaguides.com/qatar-family-visit-visa-requirements/


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.