ஜெய் பீம் திரைப்பட விவகாரம்; நடிகர் சூர்யாவுக்கு பலத்த பாதுகாப்பு!

ஜெய் பீம் திரைப்பட விவகாரம்; நடிகர் சூர்யாவுக்கு பலத்த பாதுகாப்பு!


நடிகர் சூர்யா நடித்த ஜெய் பீம் திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகியது. இத்திரைப்படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், சமூகத்தின் விளிம்பில் இருக்கும் இருளர் இன மக்களின் இன்னல்களை வெளிச்சம் போட்டு காட்டியதற்காக பெரும்பான்மையானோர் நடிகர் சூர்யாவுக்கும் படக்குழுவினருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் சூர்யாவின் ஜெய் பீம் படத்துக்கு சில தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சூர்யா மீது நடவடிக்கை எடுக்ககோரியும் காவல் துறையில் புகாரும் அளித்துள்ளனர்.


குறிப்பாக பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி கண்டித்து அறிக்கை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து பாமகவினர் தொடர்ந்து மிரட்டல் விடுத்த வண்ணம் உள்ளனர். வன்னியர் சங்கத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


குறிப்பாக ஜெய்பீம் விவகாராத்தில் நடிகர் சூர்யாவிடம் வன்னியர் சங்கம் 5 கோடி ரூபா நட்ட ஈடு கேட்டது. நடிகர் சூர்யாவை உதைத்தால் ஒரு இலட்சம் ரூபா தருவோம் என மயிலாடுதுறை மாவட்ட பா.ம.க.செயலாளர் பழனிச்சாமி அறிவித்தது சர்ச்சையானது.அதேநேரத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக திரை உலக பிரபலங்கள் அடுத்தடுத்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ட்விட்டரில் நெட்டிசன்கள் சூர்யாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர்.


ஜெய் பீம் படத்துக்கு வன்னியர் சங்கம், பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தி.நகரில் உள்ள நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கையாக சூர்யாவுக்கு மிரட்டல் விடுத்த பாமக பழனிச்சாமி மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.