ஐக்கிய இளைஞர் சக்தியின் அம்பாறை மாவட்ட எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்!

ஐக்கிய இளைஞர் சக்தியின் அம்பாறை மாவட்ட எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்!


ஐக்கிய இளைஞர் சக்தியின் அம்பாறை மாவட்டத்தின் எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (02) செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்கவின் இல்லத்தில் இடம்பெற்றது.

ஐக்கிய இளைஞர் சக்தியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மயந்த திஸாநாயக்க மற்றும் ஐக்கிய இளைஞர் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், அம்பாறை மாவட்ட செயலாளரும், அமைப்பாளருமான றிஸ்கான் முகம்மட் ஆகியோருக்கிடையில் இந்தக் கலந்துரையாடல் இடம் பெற்றது.

இக் கலந்துரையாடலில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள இளைஞர்களின் எதிர்கால நலன் கருதி கல்வி, ஊடகம், விளையாட்டு, கலாசாரம் ஆகிய விடயங்களை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றையும் றிஸ்கான் முகம்மட், தவிசாளரிடம் கையளித்ததுடன் எதிர்காலத்தில் ஒவ்வொரு பிரதேசங்களிலும் இச் செயற்றிட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில், பொத்துவில் பிரதேச அமைப்பாளர் ஆஷிக் சுபையிரும் கலந்து கொண்டார்.

-எம்.எஸ்.எம்.ஸாகிர்
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.