21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திரக் கிரகணம்! நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் அறிவிப்பு!

21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திரக் கிரகணம்! நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் அறிவிப்பு!


பூரண சந்திரக் கிரகணத்துக்கு இணையான நீண்ட சந்திர கிரகணமொன்று எதிர்வரும் 19 ஆம் திகதி நிகழவுள்ளதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது மூன்று மணித்தியாலம், 28 நிமிடங்கள், 23 வினாடிகள் நீடிக்கும் என்றும், இது 21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

இதன்போது, நிலவின் மேற்பரப்பு 97 சதவீதம் சிவப்பு நிறமாகக் காட்சியளிக்கும்.

குறிப்பாக வட அமெரிக்க பிராந்தியத்துக்கு இது தென்படும் என்றும், 2100 ஆம் ஆண்டு வரை மீண்டும் இவ்வாறானதொரு நீண்ட சந்திரக் கிரகணம் நிகழ வாய்ப்பில்லை எனவும் நாசா கணித்துள்ளது.

எதிர்வரும் எட்டு தசாப்தங்களில் மேலும் 179 சந்திர கிரகணங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், சராசரியாக வருடமொன்றில் இரண்டு சந்திரக் கிரகணங்கள் நிகழும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 19 ஆம் திகதி இவ்வருடத்துக்கான சந்திர கிரகணம் நிகழும் நிலையில், அடுத்த வருடம் மே 16 ஆம் திகதி மற்றுமொரு சந்திர கிரகணம் நிகழவுள்ளது.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.