VIDEO: கொழும்பு போர்ட் சிட்டியில் இலங்கையின் முதலாவது மணல்திட்டு பந்தய பாதை திறப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: கொழும்பு போர்ட் சிட்டியில் இலங்கையின் முதலாவது மணல்திட்டு பந்தய பாதை திறப்பு!


கொழும்பு துறைமுக நகரத்தில் (Port City) இலங்கையின் முதலாவது மணல்திட்டு பந்தய பாதை திறகொழும்பு துறைமுக நகரில் மணல் திட்டுகளை கொண்டு நிர்மாணிக்கப்பட்ட ATV வாகன பந்தய பாதைகள் இன்று (28) திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இவை, இலங்கையின் முதலாவது மணல்திட்டு பந்தயப் பாதைகளாகும்.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோரினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

கொழும்பு டூன்ஸ் பந்தய மைதானம் என பெயரிடப்பட்ட இது, துறைமுக நகரத்தில் 05 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. திறப்பு விழாவில் அமைச்சர்களான நாமல் ராஜபக்ஷ, பிரசன்ன ரணதுங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன் அவர்கள் மணல் சாலை வழியாக வாகனங்களை செலுத்தினர்.

நாட்டின் முதல் ATV டிராக் கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ளது. கம்பஹா புத்பிட்டிய மாலிகதென்ன பிரதேசத்தில் இந்த பாதை அமைந்துள்ளது. இது கிரானைட் மலைகளுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகரத்தில் இன்று திறந்து வைக்கப்பட்ட ATV Track Running on the Sand Dunes, நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது மணல் பாதை என்பது குறிப்பிடத்தக்கது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.