நாட்டில் PayPal சேவையினை பெறுவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியா, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் உள்ள PayPal பிராந்திய அலுவலகங்களை அரசாங்கம் அணுகியுள்ளதாக மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் ரி.எம்.ஜே.வை.பி. பெர்னாண்டோ தெரிவித்தார்.
தற்போது வெளிநாட்டு கட்டணங்களை மட்டுமே PayPal வழியாக செலுத்த முடியும். PayPal மூலம் இலங்கையிலிருந்து பணம் செலுத்த முடியாது.
இந்த சேவைகளை விரைவில் பெற முடியும் என்று அரசாங்கம் நம்புகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பணம் செலுத்தும் சேவையைப் பெறுவதற்கும் வழங்குவதற்கும் இலங்கை தரப்பில் எந்த தடையும் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.