அரிசி, பருப்பின் விலையை பார்த்துக் கொள்ளவதற்காகவா என்னை நியமித்தீர்கள்? ஜனாதிபதி பொதுமக்களிடம் கேள்வி!

அரிசி, பருப்பின் விலையை பார்த்துக் கொள்ளவதற்காகவா என்னை நியமித்தீர்கள்? ஜனாதிபதி பொதுமக்களிடம் கேள்வி!


என்னை ஜனாதிபதியாக நியமித்தது பருப்பு மற்றும் அரிசியின் விலைகளை பார்த்துக் கொள்வதற்கு என்றால் அதற்கு நான் தேவையில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


விவசாய பண்ணை ஒன்றை பார்வையிட இன்று (23) சென்ற போது ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார்.


அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,


"எங்களது முந்தைய அரசாங்கங்கள் கூட இதைச் செய்ய முயற்சித்தன. இது கடினமான பணி. எனது முன்னோர்களுக்கு தெரியும் பாரம்பரிய பயிற்செய்கையை எப்படி செய்வது என்று. ஆனால் துரதிஷ்டவசமாக எந்த தலைவரும் இந்த முடிவை எடுக்கவில்லை.


என்னை நியமித்தது பருப்பு மற்றும் அரிசியின் விலையைப் பார்த்துக் கொள்வதற்காக என்றால் அதற்கு நான் அவசியமில்லை. அதை விட மாற்றம் ஒன்றை கொண்டு வருவதற்காகவே, விசேடமாக இந்த விவசாயத் துறை தொடர்பில், நான் வந்தது முதல் உரத்தை இலவசமாக வழங்கினேன். 


உண்மையில் விவசாயியின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவே இலவசமாக வழங்கப்பட்டது. அதேபோல், நெல்லின் உத்தரவாத விலையை அதிகரித்தோம்" என்றார்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.