நாட்டில் சமூக ஊடகங்களில் ஆபாச பேச்சுக்களுக்கு தடை?

நாட்டில் சமூக ஊடகங்களில் ஆபாச பேச்சுக்களுக்கு தடை?


இலங்கையில் தகவல் தொழிநுட்பம் மற்றும் வேறு ஊடகங்கள் வாயிலாக உருவாக்கப்படும் ஆபாசப் பேச்சுக்களை தடை செய்வது தொடர்பான சட்டத்தை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக 2020 செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்துக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. 

குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதியமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.