கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட கண்டாவளை பகுதியில் இன்றைய தினம் (11) காணிப் பிரச்சனை ஒன்று காரணமாக இடம்பெற்ற கை கலப்பு முற்றியதன் விளைவாக மாமனாரின் கையை மருமகன் கொடூரமாக வெட்டி ஆற்றில் வீசிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உறவினர்களால் காயமடைந்தவர் உடனடியாக தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அச்சம்பவத்தில் கையை இழந்தவர் 64 வயதுடையவர் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.