பங்களாதேஷ் அணிக்கெதிரான இன்றை போட்டியில் இலங்கை அணியினால் மூன்று சாதணைகள் முறியடிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பங்களாதேஷ் அணிக்கெதிரான இன்றை போட்டியில் இலங்கை அணியினால் மூன்று சாதணைகள் முறியடிப்பு!

உலகக்கிண்ண ரி20 தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போடடியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை 171 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

பந்து வீச்சில் சமிக கருணாரத்ன, பினுர பெர்ணான்டோ மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தனர்.


பங்களாதேஷ் அணி சார்ப்பில் மொஹமட் நயீம் 62 ஓட்டங்களையும் முஸ்தபிஷுர் ரஹீம் ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டிருந்தனர்.

இதற்கமைய, 172 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சரித் அசலங்க ஆட்டமிழக்காது 80 ஓட்டங்களை பெறறுக் கொணடார்.

பாணுக்க ராஜபக்ஷ 53 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் சகிப் ஹல் ஹசன் மற்றும் நசும் அஹமட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்

இன்று முறியடிக்கப்பட்ட சாதனைகள்

  • டி20 உலகக் கிண்ண போட்டியின் 172 ஓட்டங்களை இலங்கை அணி வெற்றிகரமாக துரத்திய அதிகபட்ச இலக்கு. இதற்கு முன்பு 165 ஓட்டங்கள் (நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டி, ஜோகன்னஸ்பர்க் 2017 இல்).
  • டி -20 போட்டிகளில் ஷார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வெற்றிகரமாகத் துரத்தப்பட்ட அதிகபட்ச இலக்கு 172 ஆகும்
  • 86 ஓட்டங்கள்: டி20யில் இலங்கைக்காக அதிகபட்ச 5 ஆம் விக்கெட் பார்ட்னர்ஷிப். சரித் அசலங்க மற்றும் பானுக ராஜபக்ச ஜோடி

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.